யாழ்.மாநகர சபையின் எல்லைக்குட்பட்ட பகுதியில் குறைவடைந்த டெங்கு நோயின் தாக்கம்!

Friday, June 2nd, 2017

யாழ். மாநகர சபையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் டெங்கு நோயின் தாக்கம் இந்த மாதம் குறைவடைந்து காணப்படுவதாக மாநகர சபையின் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை தெரிவித்துள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை டெங்கு நோயின் தாக்கத்தால் அதிகளவானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த மாதத்தில் 41 பேர் மாத்திரமே டெங்கு நோயின் தாக்கத்திற்கு இலக்காகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.