யாழ்.உயர்தொழில் நுட்பக் கல்லூரி பொறியியல் பிரிவுக்கு புதிய கட்டிடம்!

Friday, October 14th, 2016

யாழ்ப்பாணம் உயர் தொழில்நுட்பக் கல்லூரியின் பொறியியல் கற்கைப் பிரிவுகளுக்கான புதிய நான்கு மாடிக்கட்டிடம் ஒன்று அமைக்கப்படவுள்ளதுடன் அதற்கான அடிக்கலை யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் பா.செந்தில்நந்தனன் நாட்டி வைத்தார்.

இது தொடர்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் பா.செந்தில்நந்தனன் அடிக்கலை நாட்டி வைத்தார். இந்த நிகழ்வில் யாழ் பிரதேச செயலாளர் பி.தயானந்தன் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினர்.

bb3858e878961de0d46cccb1cc30ad52_L