யாழில்.பேருந்து மீது தாக்குதல்!

‘யாழ்ப்பாணத்திலிருந்து திருகோணமலைக்கு சென்றுகொண்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்து மீது பஸ்தியன் சந்தியில் வைத்து இன்று (25) மதியம் கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்டுகின்றது.
மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் பேருந்து மீது கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொண்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.
பேருந்தில் இருந்த பயணிகளை வேறு பேருந்து மூலம் பயணத்தை தொடர ஏற்பாடு செய்யப்பட்டதுடன் தாக்குதலுக்குள்ளான பேருந்தை பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தள்ளனர்.
Related posts:
6 கிலோ கிராம் போதைப் பொருளுடன் ஒருவர் கைது!
மத்திய வங்கி விவகாரம்- உறுப்பினர்களுக்கு இடையில் விரிசல்!
போலி ஏ.டி.எம். அட்டை மோசடியில் ஈடுபட்ட இலங்கையர் கைது!
|
|