யாழில் பச்சை மிளகாய் அதிக விளைச்சல்!

Tuesday, March 20th, 2018

யாழ். குடாநாட்டில் பயிரிடப்பட்ட பச்சைமிளகாய்ச் செய்கை மூலம் அதிக விளைச்சலை விவசாயிகள் பெற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குடாநாட்டில் மொத்தமாக 390 வரையிலான வெக்டோயில் நிலப்பரப்பில் விவசாயிகள் பச்சை மிளகாய்ச் செய்கையில் ஈடுபட்டுள்ளனர் என்று விவசாய திணைக்களம் தெரிவித்தது. பல்வேறு பிரதேசங்களிலும் பரவலாக இச் செய்கையில் அவர்கள் ஈடுபட்டனர்.

அனேகமான செய்கையாளர்கள் எம்.ஜ.கிறின் இன மிளகாய் செய்கையாளர்கள் அதிக விளைச்சலை பெற்றுக்கொண்டனர். இந்த இன மிளகாய் விதைகளுக்கு குடாநாட்டில் பற்றாக்குறை ஏற்பட்டாலும் தனியார் விவசாய உள்ளீடுகள் விற்பனை நிலையங்களில் அவை தாராளமாக செய்கையாளர்களுக்கு விநியோகிக்கப்பட்டன.

அதிக விளைச்சலைப் பெற்றுக் கொண்ட போதும் அவற்றை சந்தைப்படுத்துவதில் விவசாயிகள் சிரமத்தை எதிர்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Related posts: