யாழில் நிலைகொண்டுள்ள படைவீரர்களை மேஜர் ஜெனரல் மகேஷ் சேனாரத்ன நிர்வகிக்கிறார் – பிரதமர்!

Thursday, December 8th, 2016

யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டுள்ள படைவீரர்களை மேஜர் ஜெனரல் மகேஷ் சேனாரத்ன நிர்வகிக்கிறார். இவர் பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்ட பின்னர் நாட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட இராணுவ அதிகாரியென்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர்கள் பலியான சம்பவத்தைத் தொடர்ந்து பாரிய அசம்பாவிதங்கள் ஏற்படவில்லை. இதுவே தென்னிலங்கையில் நிகழ்ந்திருந்தால் நிலமை வேறானதாக இருக்கும்; என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

மின்வலு, புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி, பெற்றோலியவள அபிவிருத்தி, பாதுகாப்பு, அபிவித்து மூலோபாயங்கள், சர்வதேச வர்த்தகம் ஆகிய அமைச்சுக்களுக்கான வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீடுகள் குழு நிலை விவாதம் நேற்று பாராளுமன்றத்தில் இடம்பெற்றது.

பாதுகாப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டு குழு நிலை விவாதத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உரையாற்றினார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேலும் உரையாற்றுகையில் :

எதிர்காலத்திற்கு பொருத்தமான நவீன பாதுகாப்பு படையொன்றை உருவாக்க அரசாங்கம் பாடுபடும் சகல சந்தர்ப்பங்களையும் எதிர்கொள்ளக்கூடிய வகையிலான நவீன விமானங்கள் கொள்வனவு செய்யப்படும்.

கடந்த காலத்தில் சிலர் ஐநா அலுவலகத்திற்கு முன்னால் உண்ணாவிரதம் போராட்டம் செய்தார்கள். இன்று பாதுகாப்பு படைவீரர்கள் அமைதிகாக்கும் படையணிகளில் பங்கேற்கிறார்கள்

பயங்கரவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க பாடுபட்ட அதிகாரிகளும் சேவை மூப்பின் அடிப்படையில் ஓய்வு பெற வேண்டும். அப்போதுதான் இளம் அதிகாரிகள் உயர்பதவிகளுக்கு வரலாம். அன்று பீல்ட் மாஷல் சரத் பொன்சேகாவிற்கு கொடுமைகளை இழைத்த சந்தர்ப்பத்தில் மௌனம் காத்த சிலர், இன்று படை வீரர்கள் பற்றி நீலிக்கண்ணீர் வடிவப்பது நகைப்புக்கிடமானது என்று பிரதமர்  தெரிவித்தார்.

17d229bd330a05b39c5f5c00ae4bb2a3_XL

Related posts: