மூன்று நாடுகளின் கல்வித்துறை அமைச்சர்கள் இந்தியாவில் சந்திப்பு!

Friday, January 12th, 2018

இலங்கையின் கல்வி இராஜாங்க அமைச்சர் வே. இராதாகிருஸ்ணன் இந்திய தமிழ் நாடு பள்ளிக் கல்விதுறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டயன் மலேசிய நாட்டின் கல்வி அமைச்சின் துணை உயர்கல்வி அமைச்சர் பா.கமலநாதன் ஆகியோருக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

இப்பேச்சுவார்த்தையானது இந்தியா தமிழ் நாடு அரசாங்கத்தின் பிரதான செலயகத்தில் இந்திய தமிழ் நாடு பள்ளிக் கல்விதுறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டயன் தலைமையில் நடைபெற்றது.

இந்தியா தமிழ்நாடு அரசாங்காத்தின் உதவியுடன் இலங்கையின் தமிழ் மொழி மூலமான பாடசாலைகளுக்கு ஒரு இலட்சம் நூல்களை இலவசமாக வழங்கும் செயற்திட்டத்தினதும் இலங்கை இந்தியா மலேசிய கல்வி அமைச்சுகளின் மூலம் ஆசிரியர்கள் பறிமாற்றங்கள் ஊடாக அந்த அந்த நாடுகளுக்கு சென்று ஆசிரியர்கள் பயிற்சிகளை பெற்றுக் கொள்ளும் செயற்திட்டத்தினதும் அதற்கான அமைப்பு உருவாக்கம் தொடர்பிலும் இந்தப் பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது.

Related posts: