முப்படையைச் சேர்ந்த 6000 பேருக்கு பதக்கங்கள்!

Sunday, September 18th, 2016
போரில் ஈடுபட்டமைக்காக முப்படையைச் சேர்ந்த சுமார் ஆறாயிரம் படையினருக்கு பதக்கங்கள் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஒரு மாத காலத்திற்குள் பதக்கங்களை வழங்கும் பணிகள் பூர்த்தியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 27ம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இந்த பதக்கம் வழங்கும் நிகழ்வு நடத்தப்படவுள்ளது.அடையாள ரீதியாக இந்த நிகழ்வில் சில பதக்கங்கள் வழங்கப்படவுள்ளன.
ஆறாயிரம் படை வீரர்களுக்கும் உரிய பதக்கங்கள் அவர்தம் படையணிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.போருக்காக பதக்கம் வழங்கும் இறுதி சந்தர்ப்பம் இதுவெனத் தெரிவிக்கப்படுகிறது.
போரில் ஈடுபட்டு பதக்கம் பெற்றுக்கொள்ளத் தகுதியான அனைவருககும் இந்த தடவை பதக்கம் வழங்கப்பட வேண்டுமென அரசாங்கம் படைத்தரப்பிற்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது
69.

Related posts: