முப்படையினர் சம்பளம் ரூபா பத்தாயிரத்தால் அதிகரிப்பு!

Thursday, April 28th, 2016
முப்படையினருக்கும் 10,000 ரூபா சம்பள அதிகரப்புக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை அமைச்சரவைப் பத்திரமொன்றைச் சமர்ப்பித்து இந்த யோசனையை முன்வைத்துள்ளார்.
நல்லாட்சி அரசாங்கத்தில் அரசாங்க ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட 10,000 ரூபா சம்பள அதிகரிப்பானது முப்படைகளுக்கும் வழங்கப்படவில்லை. ஆகவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் குறித்த தீர்மானத்திற்கமைய எதிர்வரும் காலங்களில் முப்படையினருக்கும் 10,000 ரூபா சம்பள அதிகரிப்பு வழங்கப்படவுள்ளது.
இந்நிலையில், நல்லாட்சி அரசாங்கத்தில் அரசாங்க ஊழியர்களுக்கு 10,000 ரூபா சம்பள அதிகரிப்பு வழங்கியதாலேயே நாடு கடுமையான பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியுள்ளதாக சிலர் குற்றம்சாட்டி வரும் நிலையில், முப்படையினருக்கும் 10,000ரூபா சம்பள உயர்வு வழங்கப்பட்டால் நாட்டின் பொருளாதார நிலை இன்னும் மோசமான நிலைக்குத் தள்ளப்படும் என பொருளியலாளர்கள் பலர் எச்சரித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts: