முன்னாள் கடற்படை ஊடகப் பேச்சாளருக்கு விளக்கமறியல்!

Saturday, July 15th, 2017

முன்னாள் கடற்படை ஊடகப் பேச்சாளர் டீ.கே.பி. திசாநாயக்கவை எதிர்வரும் 19ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கடந்த புதன்கிழமை முன்னாள் கடற்படை ஊடகப் பேச்சாளர் டீ.கே.பி. திசாநாயக்க கைது செய்யப்பட்டார். கடந்த 2007 ம் ஆண்டு 11 தமிழ் இளைஞர்கள் காணாமல் போன சம்பவம் தொடர்பில் இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.  அதன்படி இன்றுகாலை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் 19ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Related posts: