மீள்குடியேற்றப் பகுதிகளுக்கும் அச்சுவேலி தனியார் பேருந்து சேவை விஸ்தரிக்கப்படவுள்ளது!

யாழ்ப்பாணம் அச்சுவேலி தனியார் பேருந்து சேவை நாளை மறுதினம் சனிக்கிழமை முதல் மீள்குடியேற்றப் பகுதிகளுக்கும் தனது சேவையை விஸ்தரிக்கவுள்ளதாக வலி.கிழக்குத் தனியார் சிற்றூர்திச் சேவைகள் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
கடந்த யுத்தகாலத்திற்கு முன்னர் வலி. கிழக்குப் பகுதிகளூடாகவும் சிற்றூர் சேவைகளானது இடம்பெற்று வந்தது. எனினும், பின்னர் அப் பகுதிகள் உயர் பாதுகாப்புப் பகுதிகளாக அறிவிக்கப்பட்ட பின்னர் அப் பகுதிக்கான சேவைகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன.
இந்நிலையிலேயே தற்போது அப் பகுதிக்கான சேவைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக வலி கிழக்குத் தனியார் சிற்றூர்திச் சங்கத் தலைவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
மோட்டார் சைக்கிள் தீக்கிரை நெடுங்கேணியில் ஒருவர் கைது!
மத்தியதரைக் கடலில் காப்பாற்றப்பட்டவர்களில் இலங்கையரும் அடக்கம்!
யாழ்ப்பாணத்தில் எலிக்காய்ச்சல் தொற்றை தடுக்க எலிகளை கட்டுப்படுத்த வேண்டும் - பிரதிப் பணிப்பாளர் யமுன...
|
|