மாற்றுப் பாதைகளை நிர்மாணிக்க அமைச்சரவை அனுமதி – அமைச்சர் லக்ஷமன் கிரியெல்ல!

Thursday, April 6th, 2017

 “கண்டி ஸ்ரீ தலதா மாளிகை அருகிலுள்ள வீதி எந்த நிலையிலும் திறக்கப்பட மாட்டாது” எனத் தெரிவித்த உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷமன் கிரியெல்ல, கண்டி நகரின் போக்குவரத்து நெருக்கடிகளை தவிர்ப்பதற்காக மாற்று வழிகளை அமைக்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தை தொடர்ந்து, நிலையியற் கட்டளைகளின் கீழ், ஒன்றிணைந்த எதிர்கட்சித் தலைவர் தினேஷ் குணவர்த்தன எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் அமைச்சர் இதனைக் கூறினார்.

அவர் தொடர்ந்து கூறுகையில், “கண்டி ஸ்ரீ தலாதா மாளிகையை புனித பூமியாக ஐக்கிய தேசியக் கட்சி நடவடிக்கை எடுத்தது. ஆனால் கடந்த அரசாங்கம் அங்கு கார் பந்தயம் உள்ளிட்டவற்றை நடத்தியது. 20 வருடங்கள் நீங்கள் தான ஆட்சி செய்தீர்கள். அவ்வாறு செய்து விட்டு இன்று எங்கள் மீது குற்றஞ் சுமத்துகின்றீர்கள்’”என்றார்.

முன்னதாக தினேஷ் குணவர்தன எம்.பி, ‘”தலதா மாளிகை புனித பூமியைப் பாதுகாக்க இந்த அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது. தலதா மாளிகைக்கு மேலாக விமானங்கள் பயணிப்பதை தடைசெய்யும் விமானத் தடை பயண வலயத்தை அறிவிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமா, தலாதா மாளிகைக்கு முன்னால் உள்ள வீதியை திறந்து புனித பூமிக்கு இடையூறு விளைவிக்கப்படுமா” உள்ளிட்ட கேள்விகளை எழுப்பியிருந்தார்.

Related posts:

கடும் சுகாதார நடைமுறைகளுக்கு மத்தியில் சிறப்புற நடைபெற்ற நல்லூர் கந்தனின் கொடியேற்ற உற்சவம்!
மண்ணெண்ணெய் விநியோகத்தின் போது நாள் ஒன்றுக்கு ஒருவருக்கு அதிகபட்சமாக 5 லீற்றர் மண்ணெண்ணெய் மாத்திரமே...
சுவிட்சர்லாந்து பயணமானார் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க - இரு வாரங்களில் நாடு திரும்புவார் எனவும் தெரி...