மாணவியைக் காணவில்லை: சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!

க. பொ. த சாதாரண தரத்தில் கல்வி பயிலும் மாணவி ஒருவரை கடந்த-6 ஆம் திகதி திங்கட்கிழமை மாலை முதல் காணாமல் போயுள்ளதாக பெற்றோரால் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த 16 வயதான மாணவி ஒருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
திங்கட்கிழமை மாலை குறித்த மாணவி மேலதிக வகுப்புக்காகச் சென்று இரவாகியும் வீடு திரும்பாத நிலையில் இரவு- 11 மணியளவில் பெற்றோர் பொலிஸாரின் உதவியை நாடியுள்ளனர். சம்பவம் குறித்து முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதையடுத்து சுன்னாகம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
Related posts:
சுகாதாரத் துறையின் முடிவுகளின் பின்னரே பாடசாலை மாணவர்கள் தொடர்பில் ஆலோசிக்கப்படும் - கல்வி அமைச்சர்...
யாழ்ப்பாண கலாசார மண்டபத்தில் நடைபெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான உலக மகளிர் தின நிகழ்வுகள்!
முக்கியமான இரு சட்டமூலங்களை நாடாளுமன்றில் சமர்ப்பிக்க தீர்மானம் - : பதில் நிதி அமைச்சர் செஹான்!
|
|