மருத்துவக் கல்லூரி இயங்காவிட்டால் இனி நிதி கிடையாது – வடக்கு மாகாண சுகாதார, சுதேச மருத்துவ அமைச்சு அறிவிப்பு!
Saturday, November 19th, 2016லங்கா சித்த ஆயுள்வேத மருத்துவக் கல்லூரிச் செயற்பாடுகள் இந்த மாதத்தில் இருந்து இயங்காவிட்டால் மாகாணசபை மூலம் கல்லூரிக்கு வழங்கப்படும் நிதியளிப்புகள் யாவும் நிறுத்தப்படும் என வடக்கு மாகாண சுகாதார, சுதேச மருத்துவ நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் அமைச்சின் செயலர் திருவாகரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவரால் அனுப்பிவைக்கப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
கடந்த 9ஆம் திகதி வடக்கு மாகாண தலைமைச் செயலாளர் அ.பத்திநாதன் தலைமையில் ஒழுங்குச் செய்யப்பட்ட கூட்டத்தில், லங்கா சித்த ஆயுள்வேதக் கல்லூரி உத்தியோகத்தர்களுக்கான ஓகஸ்ட், செப்ரெம்பர், ஒக்டோபர் மாதங்களுக்குரிய கொடுப்பனவு வழங்குவதற்குரிய நிதியை மாகாண சுதேச மருத்துவத் திணைக்களத்திலிருந்து விடுவிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டது. லங்கா சித்த ஆயுள்வேத மருத்துவக் கல்லூரி இந்த மாதத்தில் இருந்து செயற்படாவிட்டால் அந்த நிதி விடுவிக்கப்படாது – என்றார்.
Related posts:
யாழ்ப்பாணத்தை உலுக்கும் வாள்வெட்டுக் கும்பல்: இதுவரை 81 பேர் கைது 75 பேருக்குப் பிணை!
கையிருப்பிலுள்ள பணம் தாராளமாக போதுமானது - மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவிப்பு!
எதிர்வரும் 22ஆம் திகதி நாடாளுமன்றம் மீண்டும் கூடவுள்ளது - நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர ...
|
|