மன்னாரில் ரூ. 1 கோடி பொறுமதியான ஹெரோய்ன் மீட்பு!

Thursday, August 25th, 2016

மன்னார் கட்டையடம்பன் பகுதியில் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெரோய்ன் போதைப்பொருளுடன் வைத்து நபரொருவரை, நேற்றுப (24) மாலை கைதுசெய்துள்ளதாக மன்னார் மாவட்ட போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் உதயகுமாரசிங்கம் கௌசிகன் தெரிவித்துள்ளார்.

சந்தேகநபரிடமிருந்து ஆரம்பத்தில் 723 கிராம் எடை கொண்ட ஹெரோய்ன் பொதி மீட்டப்பட்டது. அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரனைகளின் போது குறித்த சந்தேகநபர் சிறுத்தோப்பில் அமைத்துள்ள மீன் வாடியில் பதுக்கி வைத்திருந்த மேலும் 272 கிராம் எடை கொண்ட ஹெரோய்ன் பொதி மீட்கப்பட்டது.

சுமார் 996 கிராம் எடை கொண்ட ஹெரோய்ன் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதோடு, அதன் பெறுமதி ஒரு கோடி ரூபாய் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், குறித்த சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது 3 கிலோ 329 கிராம் எடை கொண்ட கேரளா கஞ்சாப்பொதியும் மீட்கப்பட்டுள்ளது. ஹெரோய்ன் மற்றும் கஞ்சா போதைப்பொருட்களுடன் கைதுசெய்யப்பட்ட குறித்த நபர், மன்னார் பேசாலை கிராமத்தைச் சேர்ந்தவர் எனவும், மேலதிக விசாரணைகளைப் போதைப்பொருள் தடுப்புப் பிரிவுப் பொலிஸார் மேற்கொண்டு வருவதாக மன்னார் மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் உதயகுமாரசிங்கம் கௌசிகன் மேலும் தெரிவித்தார்.

Related posts: