மனிதப் பாவனைக்கு பொருத்தமற்ற பால்மா விற்பனை தொடர்பில் விசாரணை!

Thursday, January 17th, 2019

மனிதப் பாவனைக்கு பொருத்தமற்ற பால்மா விற்பனை குறித்து விசாரணை செய்யுமாறு கோரப்பட்டிருக்கின்றது. அமைச்சர் ஒருவரின் உறவினர் இந்த மோசடியில் சம்பந்தப்பட்டிருப்பதாக நம்பப்படுவதாக நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய இயக்கம் தெரிவித்திருக்கிறது.

நுகர்வோர் விவகார அதிகார சபை குளியாப்பிட்டியில் அண்மையில் கம்பனியொன்றிலிருந்து பால்மாவை கைப்பற்றியிருந்தது. விலங்குகளின் உணவுக்கான பால்மா என அது கண்டறியப்பட்டது. ஆயினும் முன்னணி பால்மா கம்பனியொன்றின் இலட்சினையுடன் பயன்படுத்துவதற்காக அந்தப் பால்மா விற்பனை செய்யப்பட்டிருக்கின்றது.

நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பிற்கான தேசிய இயக்கம் இதுபற்றிக் கூறுகையில்: 200 தொன் பால்மாவை கொம்பனி கொள்வனவு செய்வதாகவும் முன்னணி பால்மா கம்பனிகளிடமிருந்து விலங்குகளுக்கு உணவாகவே இது கொள்வனவு செய்யப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

கம்பனி பால்மாவை திரும்ப பொதி  செய்து சந்தைக்கு விற்பனை செய்யவிருந்ததாகவும் கூறப்படுகின்றது. மனித நுகர்விற்கு பொருத்தமற்ற பால்மா குறித்து விரிவான விசாரணையொன்று நடத்தப்பட வேண்டுமென நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பிற்கான தேசிய இயக்கம் கேட்டிருக்கின்றது.

Related posts: