மத்திய வங்கி விவகாரம்- உறுப்பினர்களுக்கு இடையில் விரிசல்!

Friday, September 9th, 2016

மத்திய வங்கி முறிக்கொள்வனவில் முறைகேடு தொடர்பிலான நாடாளுமன்ற கோப் குழுவின்விசாரணைகள் நேற்றுடன் நிறைவடைந்தள்ளதாக அதன் தலைவர் சுனில்ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் இது தொடர்பான அறிக்கை எதிர்வரும் ஒக்டோபர் 13ம் திகதியன்றுநாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று கோப் குழுவின் தலைவர் சுனில்ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற விசாரணையின்போது மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித்குமாரசுவாமியும் தமது சாட்சியத்தை பதிவுசெய்தார்.எனினும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து கோப் குழுவினர் இணக்கத்தை எட்டவில்லை என்றுகூறப்படுகிறது.

இந்திரஜித் குமாரசுவாமி, சாட்சியமளிக்க வந்த போது பிரதியமைச்சர் ஹர்ச டி சில்வாசில கேள்விகளை அவரிடம் தொடுத்தார்.எனினும் ஏனைய உறுப்பினர்கள் எவரும் கேள்விகளை தொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்தநிலையில் குறித்த மத்திய வங்கி முறி தொடர்பான விசாரணைகள் தொடர்பில் கோப்குழுவில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள், புறம்பான அறிக்கை ஒன்றைநாடாளுமன்றத்தில் முன்வைக்க முயல்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

1073906107CBSL

Related posts:

பைஸர் தடுப்பூசியினை தவிர ஏனைய அனைத்து தடுப்பூசிகளும் கிடைக்கப்பெற்றுள்ளன – இராஜாங்க அமைச்ச்ர் சன்ன ஜ...
தாமதமாக பாடசாலைகள் ஆரம்பம் - கல்வியாண்டை உரிய வகையில் நிறைவு செய்ய மாற்று வழி – கல்வி அமைச்சு நடவடிக...
மின்சார தடையை ஏற்படுத்த வேண்டாம் - மின்தடை தொடர்பில் துறைசார் தரப்பினருக்கு ஜயாதிபதி ஆலோசனை!