மதுபோதையில் வாகனம் செலுத்தியவருக்கு நீதிமன்றம் கொடுத்த உத்தரவு!

Friday, November 17th, 2017

ஏ9 வீதியில் மதுபோதையில் வாகனம் செலுத்தியவருக்கு 6000 ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளதுடன் சாரதி அனுமதிப்பத்திரம் நான்கு மாதங்களுக்கு இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றம் இந்த உத்தரவை இன்று பிறப்பித்துள்ளது.கிளிநொச்சி ஏ9 வீதியில் மதுபோதையில் மோட்டார் சைக்கிள் செலுத்திச் சென்ற ஒருவரை கைது செய்து அவருக்கு எதிராக கிளிநொச்சி பொலிஸார் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.

குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே குறித்த நபருக்கு 6000 ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளதுடன் சாரதி அனுமதிப்பத்திரம் நான்கு மாதங்களுக்கு இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Related posts: