மதுபோதையில் வாகனம் செலுத்துவோரை கண்டறிவதற்கான சோதனை தொடரும்..!

Wednesday, December 28th, 2016

மதுபோதையில் வாகனம் செலுத்துவோரை கண்டறிவதற்காக பொலிஸாரால் முன்னெடுக்கப்படும்  விசேட சோதனை  நடவடிக்கை ஜனவரி 6ஆம் திகதிவரை தொடரும்    எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நத்தார் தினத்தை முன்னிட்டு இந்த சோதனை நடவடிக்கைகள் கடந்த சில நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. மது போதையில் வாகனம் செலுத்துவதால் அதிக விபத்துகள்   இடம்பெறுவதாக    தெரிவிக்கப்படுகின்றது.   பண்டிகை காலம்   என்பதால் இந்த நிலைமை மேலும் அதிகரிக்கலாம் என்பதைக்கருத்தில் கொண்டே விசேட சோதனை   நடவடி க்கைகளில்   பொலிஸார்  ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில்,   மேற்படி  சோதனை நடவடிக்கையானது  ஜனவரி மாதம் 6ஆம் திகதி வரை தொடரவிருப்பதாக பொலிஸ் தலைமையகத்தின் போக்குவரத்துப் பிரிவு பணிப்பாளர்  பொலிஸ்  அத்தியட்சகர்  ஏ.எம்.யு.சந்திரதாஸ  தெரிவித்தார். புதுவருடத்தை முன்னிட்டு   மதுபோதையில் வாகனம் செலுத்துவோரை கண்டறிவதற்கான இந்த விசேட சோதனை   நடவடிக்கைகள்   தொடரப்படவுள்ளதாக     தெரிவிக்கப்படுகின்றது.

425871084traffic3

Related posts: