போதையில் வாகனம் செலுத்தியோரின் அனுமதிப் பத்திரங்கள் தடுத்துவைப்பு!

Thursday, November 23rd, 2017

மதுபோதையில் வாகனம் செலுத்திய மூவருக்கு போக்குவரத்து விதிமுறைகளை மீறியமைக்காக ஒரு வருடத்திற்கு வாகனம் செலுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டதுடன் அவர்களின் சாரதி அனுமதிப்பத்திரங்களை நீதிமன்றில் தடுத்து வைக்குமாறு சாவகச்சேரி நீதிமன்றில் உத்தரவிடப்பட்டது.

மதுபோதையில் வாகனம் செலுத்திய மூவருக்கு எதிராக சாவகச்சேரி நீதிமன்றில் பொலிஸார் வழக்கு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்குகள் நேற்று தனித்தனியாக விசாரணைக்கு எடுக்கப்பட்டன. மூவரும் குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.

ஒருவருக்கு 7 ஆயிரத்து 500 ரூபாவும் இருவருக்கு தலா 6 ஆயிரம் ரூபாவும் தண்டமாக விதித்து மூவரின் சாரதிய அனுமதிப் பத்திரங்களை ஒருவருடத்துக்கு நீதிமன்றில் தடுத்து வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

மதுபோதையில் சாரதிய அனுமதிப்பத்திரம், வாகன வரிப்பத்திரம் ஆகியவை இன்றி வாகனம் செலுத்திய சாரதிக்கு 12 ஆயிரம் ரூபா தண்டம் விதித்ததுடன் சாரதிய அனுமதிப்பத்திரத்தை தடுத்து வைக்குமாறும் நீதிவான் உத்தரவிட்டார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: