தேசிய அனர்த்த நிவாரண சேவைக்கான நிலையத்தை வலுப்படுத்த நடவடிக்கை – அமைச்சர் கயந்த கருணாதிலக!

Thursday, June 15th, 2017

தேசிய அனர்த்த நிவாரண சேவைக்கான நிலையத்தை வலுப்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் காணி அமைச்சரும் அமைச்சரவை துணைப்பேச்சாளருமான கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் காணி அமைச்சரும் அமைச்சரவை துணைப்பேச்சாளருமான கயந்த கருணாதிலக தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் ,

தொடர்ச்சியாக ஏற்பட்டு வரும் இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு துரித கதியில் செயற்பட்டு நிவாரண சேவைகள் மற்றும் மீள்கட்டுமாண பணிகளை செயற்றிறனாக மேற்கொள்வதற்காக தேசிய அனர்த்த நிவாரண சேவை நிலையத்தினை மேலும் வலுப்படுத்துவது காலத்தின் தேவையாக மாறியுள்ளதாக குறிப்பிட்டார்.

இதனடிப்படையில் தேசிய அனர்த்த நிவாரண சேவை நிலையத்தில் காணப்படுகின்ற வெற்றிடங்களை உடனடியாக நிரப்புவதற்கும், அனைத்து பிரதேச செயலகத்துக்கும் ஒரு அனர்த்த நிவாரண உத்தியோகத்தல் வீதம் நியமிப்பதற்கும், அவசர பணிகளுக்காக புதிதாக பதவிகளை உருவாக்குவதற்கும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா சமர்ப்பித்த ஆவணங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts: