பொலிஸாரின் மேன்முறையீடுகள் குறித்து இதுவரை எதுவித நடவடிக்கையும் இல்லை

Friday, April 1st, 2016
இலங்கை பொலிஸ் உத்தியோகத்தர்களின் 3000 மேன்முறையீடுகள் தொடர்பில் நான்கு வருடாங்களாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தேசிய பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
முன்னர் நடைமுறையிலிருந்த அரச சேவைகள் ஆணைக்குழுவிடம் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மேன்முறையீடுகளை சமர்ப்பித்திருந்ததாக பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் ஆரியதாச குரே குறிப்பிட்டார். ஆயினும், அந்த மேன்முறையீடுகள் தொடர்பில் அரச சேவைகள் ஆணைக்குழு, எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்
இதன் பிரகாரம் குறிப்பிட்ட மேன்முறையீடுகள் தொடர்பில் உடனடி நடவடிக்கைகளை எடுப்பதற்காக இரண்டு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அத்துடன் அந்த குழுக்களின் பரிந்துரைகளுக்கு அமைவாக கட்டம் கட்டமாக மேன்முறையீடுகள் தொடர்பில் தீர்மானங்களை எடுக்கவுள்ளதாகவும் ஆணைக்குழுவின் செயலாளர் சுட்டிக்காட்டினார்.
பல்வேறு காரணங்களின் அடிப்படையில் சேவையிலிருந்து விலகியவர்கள் மற்றும் ஒழுக்காற்று நடவடிக்கையின் பேரில் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களினால் இந்த மேன்முறையீடுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

Related posts: