பேராயர்கள் மாநாட்டுக்காக அரசு 10 மில்லியன் உதவி!

Friday, September 30th, 2016

எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ளஆசிய பேராயர்கள் மாநாட்டுக்காக அரசாங்கம் பத்து மில்லியன் ரூபா நிதி உதவி வழங்கியுள்ளது.

இந்த மாநாட்டை வெற்றிகரமாக நடாத்தும் நோக்கில் அரசாங்கம், கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கு பத்து மில்லியன் ரூபா பண உதவி வழங்கியுள்ளது. இந்த நிதி இன்றைய தினம் கர்தினாலிடம் ஒப்படைக்கப்பட்டது.

கர்தினாலின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு சென்ற நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் சுற்றுலாத்துறை மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க ஆகியோர் இந்த நிதியை வழங்கியுள்ளனர்.

எதிர்வரும் நவம்பர் மாதம் 28ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 4ஆம் திகதி வரையில் நீர்கொழும்பில் இந்த மாநாடு நடத்தப்பட உள்ளது.ஆசிய பிராந்திய வலயத்தை பிரதிநிதித்துவம் செய்யும் 150 பேராயர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Cardinal-Telesphore-Placidus-Toppo

Related posts: