பெல்ஜியத்தின் புதுப்பிக்ககூடிய மின்வலு உற்பத்தி திட்டப் பகுதியை பார்வையிட்டார் பிரதமர் !

Tuesday, October 18th, 2016
பெல்ஜியத்தின் புதுப்பிக்கக்கூடிய மின்வலு உற்பத்தி திட்டங்களை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழுவினர் பார்வையிட்டுள்ளனர்.

குறித்த விஜயத்தின் போது புதுப்பிக்கக்கூடிய மின்வலு தோற்றுவாய்களை பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திட்டத்தை அனுசரிப்பது தொடர்பான சவாலை தாம் வெற்றிகரமாக சமாளித்ததாக பெல்ஜிய இளவரசர் லொவ்ரான் பிரதமர் மந்திரி ரணில் விக்கிரமசிங்கவிடம் தெரிவித்தார்.

இளவரசர் லொவ்ரான் பெல்ஜியத்தின் இயற்கை வள, நிலைபெறான முகாமைத்துவ மற்றும் தூய்மை தொழில்நுட்ப மேம்பாட்டு  அரச அமைப்பின் தலைவராக கடமையாற்றுகிறார். இவருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது 120 வருட கால பழமைவாய்ந்த கட்டடத் தொகுதியில் புதுப்பிக்கக்கூடிய மின்வலுவை பயன்படுத்தியே சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த கட்டடத்தில் சூரிய சக்தியும், பூமியின் வெப்பத்தில் இருந்து உற்பத்தி செய்யப்படும் சக்தியும் பயன்படுத்தப்படுகின்றன. கட்டடத்தில் உள்ள மனிதர்களின் உடலில் இருந்து வெளியேறும் உஷ்ணமும் மின்வலு உற்பத்திக்காக பயன்படுத்தப்படுவதாக இளவரசர் சுட்டிக்காட்டினார்.

பிரதமர் தலைமையிலான இலங்கை தூதுக்குழு பிரசெல்ஸ் நகரில் அமைந்துள்ள புதுப்பிக்கக்கூடிய மின்வலு நிலைய மாளிகையில் பெல்ஜிய இளவரசரை சந்தித்தார்கள். சமகாலத்தில் அணுசக்தியை பயன்படுத்தி பெல்ஜியத்தின் மின்வலு உற்பத்தி செய்யப்படுகின்றது. எதிர்காலத்தில் புதுப்பிக்கக்கூடிய மின்வலு தோற்றுவாய்களை நாடுவது பற்றி பெல்ஜியம் சிந்திக்கிறது.

இந்தப் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து பிரதமர் தலைமையிலான தூதுக்குழு நேற்று கட்டடத் தொகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மின்வலு உற்பத்தித் தொகுதிகளையும் கருவிகளையும் நேரில் பார்வையிட்டது.

8177655d6bf3e4609d44c724c011931a_L

Related posts: