பெண்களுக்கு எதிரான வன்முறை இவ்வாண்டில் 1700 முறைப்பாடுகள்!

Saturday, November 26th, 2016

பெண்களுக்கு எதிரான வன்முறை தொடர்பில் இந்த வருடத்தில் மாத்திரம் 1700இற்கும் அதிகமான முறைப்பாடுகள் இதுவரை பதிவாகியுள்ளதாக பெண்களுக்கான தேசிய குழுவின் நிறைவேற்று பணிப்பாளர் அநுலா இந்திராணி தெரிவித்துள்ளார்.

பெண்களுக்கு எதிரான வன்முறை தொடர்பில் பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்திற்கும் முறைப்பாடுகள் கிடைப்பதாக பெண்களுக்கான தேசிய குழுவின் நிறைவேற்று பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

வன்முறையைக் கட்டுப்படுத்த பல பிரிவுகளுடாகவும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக அவர் தெரிவித்தார். இதனடிப்படையில் பிரதேச செயலக மட்டங்களிலும் வேலைத்தளங்களை மையமாகக் கொண்டு தோட்டப்புறப் பிரதேசங்களிலும் தெளிவூட்டல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக அநுலா இந்திராணி மேலும் தெரிவித்துள்ளார்.

Tamil_News_335487008095 copy

Related posts: