புது வருடத்த்தை முன்னிட்டு கைதிகளுக்கு சலுகை!

Monday, April 11th, 2016
பிறக்கவிருக்கும் தமிழ், சிங்கள புதுவருடப் பிறப்பை முன்னிட்டு சிறையில் இருக்கும் கைதிகளுக்கு அவர்களது வீட்டில் இருந்து கொண்டு வரும் உணவுகளை உண்ண வாய்ப்பு வழங்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இம் மாதம் 13ம், 14ம் திகதிகளில் நாட்டிலுள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் உள்ள கைதிகளுக்கும் இந்த வாய்ப்பு கிட்டவுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.
இதன்படி குறித்த இரு நாட்களும் காலை 08.30 முதல் மாலை 04.30 வரையான காலப் பகுதியில் உறவினர்களுக்கு உணவை எடுத்து வந்து கைதிகளுக்கு வழங்க முடியும் என, கொண்டுவரப்படும் உணவுகளை அதிக சோதனைக்கு உட்படுத்தும் வேலைத் திட்டங்களும் மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

Related posts: