புகைத்தலில் வீழ்ச்சி – சிகரட்டுகளின் விலை அதிகரிப்பு!

Tuesday, April 18th, 2017

சிகரட்டுகளின் விலையை அதிகரிக்க ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன மேற்கொண்ட தீர்மானம் காரணமாக புகைத்தல் குறிப்பிடத்தக்களவு குறைந்துள்ளதாக ஹெல்தி லங்கா நிறுவனத்தின் தலைவர் மஹேந்திரா ஜயசிங்ஹ தெரிவித்துள்ளார்.

இததொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது:

இதன் மூலம் அரசாங்கத்தின் வருமானம் குறைந்துள்ள போதிலும், நீண்ட கால சுகாதார வசதிகளுக்காக அரசாங்கத்தினால் ஒதுக்கீடு செய்யப்படும் பாரிய தொகை சேமிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களை போதைப்பொருள் மற்றும் மதுசாரங்களில் இருந்து மீட்டெடுப்பதற்காக நடைமுறை வேலைத்திட்டங்கள் பலவற்றை தற்போது ஹெல்தி லங்கா நிறுவனம் முன்னெடுத்துள்ளது என்றும் கூறினார்

சமுர்த்தி அதிகார சபையுடன் இணைந்து சிறுவர்களை தெளிவுபடுத்தும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சிறுவர்களை தெளிவுபடுத்துவது மிகவும் நன்மைபயக்கும் விடயம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Related posts: