பிறப்பு,இறப்பு, விவாகம் சான்றிதழ்களின் திருத்தி அமைக்கப்பட்ட பிரதிகளைப் பெற்றுக் கொள்ள முடியும் – முல்லைத்தீவு மாவட்ட காணிப்பதிவாளர் தெரிவிப்பு!

Thursday, November 10th, 2016

முல்லைத்தீவு மாவட்டத்தில் வாழ்கின்ற மக்களின் இறப்பு, பிறப்பு, விவாக சான்றிதழ்களில் வாசிப்பதற்கு கடினமானதும் மற்றும் ஒன்றாக இணைந்த தெளிவற்ற எழுத்துக்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது போன்ற குறைபாடுகளுடைய சான்றிதழ்களின் திருத்தி அமைக்கப்பட்ட பிரதிகளைப் பெற்றுக்கொள்ள முடியுமென முல்லைத்தீவு மாவட்ட காணிப் பதிவாளர் மக்களுக்கு அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,

ஒன்றாக இணைந்த தெளிவற்ற எழுத்துக்களினால் எழுதப்பட்டவை அல்லது வாசிப்பதற்கு கடினமானதும் இறப்பு, பிறப்பு, விவாக சான்றிதழ்களின் திருத்தம் செய்யப்பட்ட பிரதிகளை பிறப்பு, இறப்பு சட்டத்தின் 13ஆவது பிரிவின் விரகாரம் பொதுமக்கள் பெற்றுக் கொள்ள முடியும். எனவே தொளிவான புதிய பிரதிகளைப் பெற விரும்புவோர் தங்களிடமுள்ள உரிய சான்றிதழ்களுடன் எழுத்து   மூலமான கடிதமொன்றையும் மற்றும் திருத்தப்பட்ட பிரதிகளுக்கான கட்டணத்தையும் செலுத்திப் பெற்றுக் கொள்ள முடியும். மேற்படி ஆவணங்களுடன் திங்கட்கிழமை தொடக்கம் வெள்ளிக்கிழமை வரை காலை 9 மணி தொடக்கம் 4மணிவரை தங்கள் பகுதியிலுள்ள பிரதேச செயலகத்திலுள்ள பிறப்பு, இறப்பு விவாகப் பதிவாளா அலுவலகத்துடனோ தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளுமாறு அவர் மேலும் தெரிவித்தார்.

DSC07010

Related posts:

பொருளாதார சிக்கல்களில் இருந்து நாடு விடுபட அனைவரது பங்களிப்பும் அவசியம் - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்...
வகுப்பறையில் விரோதம்’ - சக மாணவிகளுக்கு விசம் கலந்த நீரை கொடுத்த மாணவி - நாராம்மல பகுதி பாடசாலையில் ...
யாழ் மாவட்ட விவசாயிகளுக்கு மானிய அடிப்படையில் மண்ணெண்ணை - ஏற்பாடுகள் செய்யப்படும் என விவசாய அமைச்சர...