பிரதேச குறியீடு ஏன் பயன்படுத்துவதில்லை?

Tuesday, July 19th, 2016

இலங்கையின் ஒவ்வொரு பிரதேசத்திற்கும் தனித்தனி தொலைபேசி பிரதேசக் குறியீடுகள் பயன்படுத்தப்பட்டுகின்றது.

யாழ்ப்பாணம் 021, மன்னார் 023, வவுனியா 024 இவ்வாறு காணப்படும் போது கிளிநொச்சி மாவட்டத்திற்கு மட்டும் யாழ் மாவட்ட குறியிடான 021 பாவிக்கப்படுகின்றன.

கிளிநொச்சி மாவட்டத்திற்கென பிரதேச குறியீடாக 022 ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளது. இருந்தும் இதை ஏன் பயன்படுத்துவதில்லை. யாழ்ப்பாணத்தின் பிரதேசங்களிற்குட்பட்ட குறியீடு கிளிநொச்சியில் பயன்படுத்துவதில் தவறில்லை. ஆனால் கிளிநொச்சி தனி மாவட்டமாகும். கிளிநொச்சிக்கு என தனியான பிரதேசக் குறியீடாக 022ஐ இன்னமும் ஏன் பாவனைக்கு தரவில்லை என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

Related posts: