பாலித தெவரப்பெருமவிற்கு அவசர சத்திரசிகிச்சை-மருத்துவர்கள்!

Thursday, July 7th, 2016

கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெருமவிற்கு உடனடியாக பைபாஸ் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டுமென மருத்துவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

மத்துகம மீகஹாதென்ன பாலர் பாடசாலையில் அத்து மீறி பிரவேசித்ததாக பாலித தெவரப்பெரும மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. களுத்துறை சிறைச்சாலையில் விசேட பாதுகாப்பிற்கு மத்தியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தெவரப்பெருமவை நேற்று மருத்துவர்கள் பரிசோதனையிட்டுள்ளனர்.

சிறைச்சாலை மருத்துவர்கள் இந்த பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளனர். இதன் போது உடனடியாக பாலித தெவரப் பெருமவிற்கு பைபாஸ் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டுமென பரிந்துரை செய்துள்ளனர். பாடசாலை சம்பவத்தின் பின்னர் கொழும்பு நவலோக்க வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அறிக்கைகளையும் கவனத்திற் கொண்டு இந்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது

Related posts: