பாதுகாப்பற்ற புகையிரத கடவை பணிகளுக்கு சிவில் பாதுகாப்பு படையினர்!

Wednesday, November 2nd, 2016

பாதுகாப்பற்ற புகையிரத கடவைகளுக்கு சிவில்  பாதுகாப்பு படையினரை கடமையில் ஈடுபடுத்த போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்துள்ளார்.இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பற்ற புகையிரத கடவை ஊழியர்கள் முன்னெடுத்துள்ள பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.நாட்டில் 679 பாதுகாப்பற்ற ரயில் கடவைகள் காணப்படுகின்றன. குறித்த ரயில் கடவைகளில் தொழில் புரியும் 25 சதவீதமான ஊழியர்கள் பணிப்பகிஷப்பில் ஈடுபட்டுவருவதனால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

42-4

Related posts: