பாடசாலை மாணவர்களுக்கு கல்வி அமைச்சினால் விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்!

Saturday, August 14th, 2021

கல்விக்காக ஒதுக்கப்பட்ட 20 தொலைக்காட்சி அலைவரிசைகள், ஆறு புதிய தொலைக்காட்சி அலைவரிசைகள் மற்றும் ஒரு வானொலி அலைவரிசை என்பன அடுத்த வாரம் ஆரம்பிக்கப்படும் என்று கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

ஊடக அமைச்சில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய அவர், ‘விஷன் எஃப்எம்’ வானொலி நிலையம், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துடன் இணைந்து தொடங்கப்படும் என்று கூறியுள்ளார்.

இந்த கல்வி அலைவரிசைகள் PEO TV மூலம் இலங்கை டெலிகொமுடன் இணைந்து செயல்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பொருளாதார நெருக்கடிகள், சுகாதார நெருக்கடிகள் மற்றும் ஆசிரியர் வேதன முரண்பாடு போன்ற பிரச்சினைகள் இருந்தபோதிலும் மாணவர்களின் கல்விக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: