பல்கலைக்கு தெரிவான மாண­வி­ தூக்­கிட்டு தற்­கொலை!

Monday, February 20th, 2017

 

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக அறிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாணம், நாயன்மார்கட்டு பிரதேசத்தை சேர்ந்த ரவீந்திரராஜா திவ்யா எனும் 21 வயதான யுவதியே தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

நேற்றுக் காலை தாயார் இவரது அறையினை திறந்த போது இவர் மின்விசிறியில் துக்கிட்டு தற்கொலை செய்த நிலையில் காணப்பட்டுள்ளார்.

இதனையடுத்து உடனடியாக அவரை வைத்தியசாலையில் சேர்த்த போதும் அவர் முன்பே இறந்து விட்டதாக யாழ்.போதனா வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இவரது மரண விசாரணையை யாழ்.போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டிருந்தார்.

1459497513-3289

Related posts: