பனை அபிவிருத்தி சபையால் குடாநாட்டில் கைப்பணி பயிற்சி நிலையங்கள் திறக்கப்படவுள்ளன

Saturday, February 17th, 2018

யாழ்ப்பாணக் குடாநாட்டில் பனை அபிவிருத்தி சபையால் இரண்டு கைப்பணி பயிற்சி நிலையங்கள் இந்த மாதம் திறந்து வைக்கப்படவுள்ளன. வறணி மற்றும் ஊரெழு பிரதேசங்களில் இந்தப் பயிற்சி நிலையங்கள் திறந்து வைக்கப்படவுள்ளன என பனை அபிவிருத்திச் சபை தெரிவித்தது.

ஒவ்வொரு கைப்பணி பயிற்சி நிலையத்திலும் இருபது வரையிலான பயிற்சியாளர்கள் இணைக்கப்படுவார்கள். இவர்களுக்கு ஆறு மாத காலத்துக்குப் பயிற்சிகள் வழங்கப்படும். பயிற்சியின் நிறைவில் கைப்பணிக்கான மூலப் பொருள்கள் மற்றும் உபகரணங்கள் கொள்வனவக்குரிய உதவிகள் வழங்கப்படும் எனவும் சபை தெரிவித்துள்ளது.

Related posts: