நூலக தகவல் விஞ்ஞான டிப்ளோமா கற்கை நெறி!

Thursday, November 10th, 2016

நூலக தகவல் டிப்ளோமா கற்கை நெறி தரம் 1இற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இக் கற்கை நெறியானது நூலக தகவல் விஞ்ஞானத்தை சேர்ந்த பல்வேறு தொழில்களுக்கான புகுமுக தகைமையாக விளங்குகின்றது. மேற்படி கற்கை நெறியானது யாழ்ப்பாணம் உட்பட நாடளாவிய ரீதியில் 6 நிலையங்களில் நடத்தப்படுகிறது.

புகுமுகத் தகைமைகள்:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றில் பெற்ற பட்டம் அல்லது க.பொ.த(உஃத) பரீட்சையில் ஒரே அமர்வில் மூன்று பாடங்களில் சித்தி அத்துடன் க.பொ.த (சாஃத) பரீட்சையில் 2இற்கு மேட்படாத அமர்வுகளில் 6 பாடங்களில் சித்தி பெற்றிருப்பதுடன் அவற்றுள் தாய்மொழியில் திறமை சித்தியும் கணிதம் மற்றும் ஆங்கிலத்தில் சித்தியும் பெற்றிருத்தல் வேண்டும்.

மொழி மூலம்: தமிழ் (யாழ்ப்பாண நிலையத்தில்)

கற்கை நெறி கட்டணம்: ரூபா 16,000 விரிவுரைகளுடன் கூடிய வகுப்புக்கள் வார இறுதி நாட்களில் நடைபெறும்.

கற்கைநெறி தொடர்பான விபரங்களையும் விண்ணப்பப்படிவத்தையும் பின்வரும் முகவரியில் அமைந்துள்ள இலங்கை நூலகச் சங்கத்தில் அல்லது யாழ்ப்பாண நிலை ஒருங்கிணைப்பாளர் கலாநிதி சந்திரசேகரிடம் பெற்றுக் கொள்ளலாம்.

diploma-en

Related posts:

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பாடசாலைகளுக்கு மீண்டும் விடுமுறை - கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும அறி...
மறைந்த ஓய்வு நிலை மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் திருவுடலுக்கு யாழிழ்ப்பாணத்தில் பலரும் அஞ்ச...
புதிய சட்ட மா அதிபராக ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சய ராஜரத்னம் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம்!