நுளம்புக் குடம்பிகளை அழித்தொழிக்க யாழ். மாநகர சபையின் சுகாதாரப் பகுதியினர் புதிய நடவடிக்கை!

Friday, September 30th, 2016

நுளம்புக் குடம்பிகளை அழித்தொழிக்க மீன் குஞ்சுகளை குடியிருப்புக்களின் கிணறுகள், பொதுக் கிணறுகளில் விடுவதற்கு யாழ். மாநகர சபையின் சுகாதாரப் பகுதியினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

தேசிய நுளம்புக் கட்டுப்பாட்டு வாரத்தை முன்னிட்டு யாழ். மாநகர சபையின் சுகாதாரப் பகுதியினர் குடியிருப்பு வீடுகள் மற்றும் பொதுவிடங்களைச் சோதனை செய்தும் வருகின்றனர். இதன் ஒரு கட்டமாக நுளம்புக் குடம்பிகள் காணப்படும் குடியிருப்புக் கிணறுகள், பொதுக் கிணறுகளுக்குள் மீன் குஞ்சுகள் விடப்பட்டும் வருகின்றன.

நுளம்புக் கட்டுப்பாட்டு வாரத்தில் மீன் குஞ்சுகள் கிணறுகளுக்குள் விடப்படும் நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என யாழ். மாநகரசபையின் சுகாதாரப் பகுதியினர் தெரிவித்துள்ளனர்.

 jaffna-municipal2

Related posts: