நீதிமன்றிலிருந்து கைதி தப்பியோட்டம்!

Thursday, July 27th, 2017

யாழ்ப்பாணம் நீதிமன்றில் ஆஜராக்கப்பட்ட கைதியொருவர் தப்பியோடியுள்ள சம்பவம், நீதிமன்றில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருட்டுச் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட யாழ்.பாண்டியன்தாழ்வு பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர், யாழ். நீதிமன்றில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார்.அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, நீதிமன்றிலுள்ள கூண்டில் இடவசதி இல்லாத காரணத்தால் அதற்கருகில் கதிரையொன்றில் அமர்த்தப்பட்டிருந்தார்.

இதன்போது, நீதிமன்றிற்கு வந்திருந்த பொதுமக்களுக்குள் மறைந்து குறித்த கைதி தப்பியோடியுள்ளார். சந்தேகநபரை தேடும் நடவடிக்கையில் யாழ். பொலிஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Related posts: