நிரந்தர நியமனத்தை விரைவில் தருமாறு யாழ். தொண்டர் ஆசிரியர்கள் கல்வி அமைச்சரிடம் கோரிக்கை!

Monday, February 6th, 2017

வடக்கு மாகாணத்தில் நீண்டகாலமாகத் தொண்டர்களாகவும், பகுதிநேரம் மற்றும் ஒப்பந்த அடிப்படையிலும் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான நிரந்தர நியமனத்தை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று யாழ்ப்பாணத் தொண்டர் ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகள் கோரியுள்ளனர்.

மத்திய கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவாசத்துக்கும் யாழ்ப்பாண மாவட்டத் தொண்டராசிரியர் சங்கப் பிரதிநிதிகளுக்குமான சந்திப்பு பத்தரமுல்லையில் அமைந்துள்ள அமைச்சர் அலுவலகத்தில் கடந்த வாரம் அண்மையில் நடைபெற்றது.

இந்தச் சந்திப்பிலேயே இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டது என்று யாழ்ப்பாணத் தொண்டர் ஆசிரியர் சங்கம் அனுப்பிய செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஆசிரியர்களுக்கான நியமனங்கள் எப்போது வழங்கப்படும் என்பதை உடனே கூறமுடியாது. ஒரு வார காலத்தினுள் நேர்முகத் தேர்வு நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். நேர்முகத் தேர்வில் உயர்ந்த கல்வித் தகமை மற்றும் 3 வருடம் தொடர் சேவை (2009முன்) கவனத்தில் கொள்ளப்படும்.

போர்க்காலத்தில் இருந்து தொண்டராசிரியர்கள் ஆற்றிவரும் சேவை நன்கு தெரியும். அதனாலேயே அமைச்சரவைப் பத்திரத்துக்கு அனுமதி பெற்றுள்ளதாக மத்திய கல்வி அமைச்சர் எம்மிடம் தெரிவித்தார்.

கல்வித் தகைமை கவனத்தில் கொள்ளப்படும் என்ற கோரிக்கையை ஏற்றுக்கொண்டு 3 வருடத் தொடர் சேவையை 2013ஆம் ஆண்டில் இருந்து கவனத்தில் எடுக்கவேண்டும் என்று எம்மால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அதைச் சாதகமாகப் பரிசீலிப்பதாக அமைச்சர் கூறினார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

934e0558b0afc83c96c5879bf580a11c_XL

Related posts:


பாடசாலைகள் தனிமைப்படுத்தல் முகாம்களாக ஒருபோதும் மாற்றப்படமாட்டாது - படையினரை தங்க வைக்கவே சில பாடசா...
டொலர் தட்டுப்பாட்டு நெருக்கடி ஒருபோதும் நிகழாதிருப்பதை மத்திய வங்கி உறுதி செய்யும் – ஆளுநர் அஜித் நி...
தேர்தல் உறுதிமொழிக்கு அமைய நாடு முழுவதும் தேசிய பாடசாலைகள் அமைக்கப்படும் - கல்வி அமைச்சர் தினேஷ் குண...