நாவற்குழியில் பெருமளவு பனை மரங்கள் அழிப்பு – பனை அபிவிருத்திச் சபை சட்ட நடவடிக்கை!

Thursday, December 20th, 2018

நாவற்குழி – கைதடி, பின்முருங்கை வீதி, கடற்கரையோரத்தில் 10 ஏக்கர் பனந்தோப்பில் எந்தவிதமான அனுமதியின்றி சுமார் 500 – 600 வரையான பனை மரங்கள் மற்றும் வடலிகள் சட்டவிரோதமாக இரண்டு கனரக வாகனங்கள் மூலம் நேற்று முன்தினம் நண்பகல் 12.15 மணியளவில் அழிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பில் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சபையின் உத்தியோகத்தர்கள் சென்று பனை அழிப்பினை தடுத்து நிறுத்தியதுடன் அப்பகுதிக்குரிய கிராம உத்தியோகத்தர் மற்றும் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்து அவர்களின் ஒத்துழைப்புடன் இரண்டு வாகனங்களையும் சாரதிகளையும் சட்ட நடவடிக்கையின் பொருட்டு பொலிஸ் நிலையத்திற்குக் கொண்டு சென்றதுடன் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

வடமாகாணத்தில் பனை வளமானது அருகி வரும் நிலையில் அபிவிருத்தித் தேவைகளுக்காக பெருமளவில் திட்டமிட்டு அழிக்கப்படுவது சமூக ஆர்வலர்களிடையே விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. இனியும் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறும் பட்சத்தில் பனை அபிவிருத்திச் சபையானது கடுமையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டது.

Related posts: