நாட்டை  ஆட்டங்காண வைக்கும் முச்சக்கர வண்டி சாரதிகள்!

Sunday, September 4th, 2016

முச்சக்கர வண்டி சாரதித் தொழிலை பெரும் எண்ணிக்கையிலான இளைஞர்கள் தெரிவு செய்வதால், நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படும் என இலங்கை முதலீட்டுச் சபையின் தலைவர் சட்டத்தரணி உபுல் ஜயசூரிய எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மாதாந்தம் ஐயாயிரம் இளைஞர்கள் முச்சக்கர வண்டி செலுத்தும் தொழிலில் புதிதாக இணைந்து கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலைமையானது நாட்டின் பொருளாதாரத்திற்கு ஆரோக்கியமானதல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறு நாட்டின் குறிப்பிடத்தக்களவு ஊழிய வளம் முச்சக்கர வண்டி சாரதி தொழில்துறையில் முடங்குவதனால் கைத்தொழில் பேட்டைகள் உற்பத்திசாலைகளின் ஊழிய வளப் பற்றாக்குறை ஏற்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார். புதிய அரசாங்கம் பதவி ஏற்றுக்கொண்டதன் பின்னர் கையொப்பமிட்ட சில முதலீட்டு திட்டங்களைக் கூட அமுல்படுத்த முடியாத நிலைமை ஏற்படும் என அவர் வார இறுதி பத்திரிகையொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

பத்து லட்சம் பேர் முச்சக்கர வண்டி சார் தொழில்துறைகளின் மூலம் ஜீவனோபாயம் நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Three-wheeler

Related posts: