நாட்டில் இதுவரை 118,767 பேருக்கு கொவிஷீல்ட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன!

Wednesday, February 3rd, 2021

நாட்டில் இதுவரை ஒரு இலட்சத்து 18 ஆயிரத்து 767 பேருக்கு ஒக்ஸ்போர்ட் அஸ்ரசெனிகா கொவிஷீல்ட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார தரப்பு தெரிவித்துள்ளது.

சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞானப்பிரிவு இதனை தெரிவித்துள்ளது. கடந்த 29 ஆம் திகதிமுதல் இந்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.

அந்தவகையில் நேற்றையதினம் மாத்திரம் 23,217 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக தொற்று நோய் விஞ்ஞானப்பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

8 மாணவர்களது வகுப்புத் தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் வகுப்பு பகிஷ்கரிப்பு!
சிங்களமயமாதலை கூட தடுக்க முடியாதவர்கள் அரசுக்கு முண்டு கொடுப்பது ஏன்- முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் ...
பாடசாலை மாணவர்களின் புத்தகப்பைகளின் எடை குறைப்பு - பாடசாலைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது சுற்றுந...