நாடுமுழுவதும் இன்று சமையல் எரிவாயு கொள்கலன்கள் விநியோகம் – லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு!

Thursday, July 14th, 2022

கொழும்புக்கு மேலதிகமாக ஏனைய மாவட்டங்களிலும் இன்றையதினம் சமையல் எரிவாயு கொள்கலனை விநியோகிக்கப்பட்டதாக  லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

கொழும்பு மாவட்டத்திற்கு 50 ஆயிரம் சமையல் எரிவாயு கொள்கலனையும், ஏனைய மாகாணங்களுக்கு 50 ஆயிரம் சமையல் எரிவாயு கொள்கலனையும் விநியோகிக்கவுள்ளதாக அந்த நிறுவனத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதற்கு காவல்துறையின் ஒத்துழைப்பும் பெறப்பட்டுள்ளதாக வும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக தொடர்ந்தும் மக்கள் லங்கா ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக நீண்ட வரிசையில் காத்திருப்பதை அவதானிக்க முடிகின்றமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: