நல்லூர் ஆலயச் சுற்றாடலில் வீடுகளில்  நாய்களை வளர்ப்போர் கட்டிப் பராமரிக்குமாறு அறிவுரை!

Monday, August 8th, 2016

வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர்க் கந்தசுவாமி ஆலயப் பெருந்திருவிழா இன்று(08) காலை இடம்பெறவுள்ள நிலையில் நல்லூர் ஆலயச் சுற்றாடலில் வீடுகளில்  நாய்களை வளர்ப்போர் அவற்றைக் கட்டிப் பராமரிக்குமாறு யாழ். மாநகர சபையின் சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.

நாய்களின் உரிமையாளர்கள் நாய்களுக்குத் தடுப்பு மருந்தேற்றியிருப்பதுடன், யாழ். மாநகர சபையில் பதிவினை மேற்கொண்டு அனுமதிப் பத்திரம் வைத்திருக்கவும் வேண்டும்.

மேலும், பொதுச் சுகாதாரப் பரிசோதகர் வீடுகளிற்குத் திடீர்ப் பரிசோதனை மேற்கொள்ளும் போது அனுமதிப் பத்திரம் வைத்திருக்காத நாய்களின் உரிமையாளர்கள் மீது நாய்கள் பதிவு செய்யும் கட்டளைச் சட்டத்தின் பிரகாரம் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts:

அனைவருக்கும் இலவச மின்சார இணைப்புகளை வழங்குவதே அரசாங்கத்தின் திட்டம் - அமைச்சர் துமிந்த திஸாநாயக்க ...
யாழ். குடாநாட்டில் 38 பேருக்கு கொரோனா தொற்று - வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தகவல்!
சிறுமி கிஷாலினியின் மரணத்திற்கு நீதி கோரி யாழ் பேருந்து நிலையம் முன்பாக பெண்கள் அமைப்புகள் போராட்டம்...