நயினாதீவு அம்மன் விவகாரம் தொடர்பிழல் பிரதமரின் அவசர உத்தரவையடுத்து தொடர்புடைய படையினரிடம் விசாரணை!

Monday, June 22nd, 2020

இலங்கையின் வரலாற்றுப் சிறப்புமிக்க நயினாதீவு நாகபூஷனி அம்மன் கோவில் உற்சவத்தின் போது படையினர் காலணிகளுடன் ஆலயத்துக்குள் சென்றமை குறித்து பிதமர் மகிந்த ராஜபக்ஷ உடனடிக் கவனத்தைச் செலுத்தியிருக்கின்றார்.

வடபிராந்தியப் பிரதிப் பொலிஸ் மா அதிபரை இன்று காலை தொடர்புகொண்ட பிரதமர், இது தொடர்பாக உடனடியாக விசாரணை நடத்துமாறும், இனிமேல் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாமல் இருப்பதை உறுதிப்படுத்துமாறும் உத்தரவிட்டுள்ளார்.

இதனையடுத்து, நயினாதீவுப் பகுதிக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சம்பந்தப்பட்ட படையினரை அழைத்து இன்று காலை விசாரணை நடத்தியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

நடைபெற்ற சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்த படையினர், தாம் வேண்டும் என்று இவ்வாறு செய்யவில்லை எனவும், இவ்வாறான சம்பவங்கள் இனிமேல் இடம்பெறாது எனவும் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்’கது.

Related posts: