நன்னீர் மீன்பிடித்துறையில் வளர்ச்சி!

Wednesday, December 21st, 2016

நாட்டில் வரட்சியுடன் கூடிய காலநிலை காணப்பட்டாலும் இந்த வருடம் நன்னீர் மீன்பிடித்துறை வளர்ச்சி கண்டிருப்பதாக கடற்றொழில் மற்றம் நீர்வள அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டில் 4.1சதவீத வளர்ச்சியை பதிவு செய்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாண்டில் நன்னீர் மீன்பிடித்துறையில் கடல்துறைசார் மீன்பிடியும் இரண்டு சதவீத அதிகரிப்பை பதிவு செய்திருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார். நன்னீர் மீன்பிடித்துறையை மேம்படுத்துவதற்காக நடைமுறைப்படுத்தப்படும் வேலைத்திட்டங்களினால் அடுத்த வருடம் எட்டு சதவீத வளர்ச்சியை மீன்பிடித்துறை அடையும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

இவ்வருடத்தின் ஒக்டோபர் மாதம் வரையிலான காலப்பகுதியில் மொத்த கடற்றொழில்சார் உற்பத்தி நான்கு லட்சத்து 32 ஆயிரம் மெற்றிக் தொன்களை தாண்டியிருந்தது. இதில் நன்னீர் மீன்பிடித்துறையின் பங்களிப்பு 14 சதவீதமாகும்.

deepa-161216-seithyindia copy

Related posts: