தேர்த் திருவிழாவிற்குச் சென்ற வேளை வீடுடைத்துத் திருட்டு: சந்தேகநபரான இளைஞனுக்குப் பிணை!

Wednesday, September 21st, 2016

வீட்டிலுள்ள அனைவரும் தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலயத்தின் தேர்த் திருவிழாவிற்குச் சென்ற வேளை பட்டப் பகல் வேளையில் தெல்லிப்பழை துர்க்காபுரம் பகுதியில் வீடுடைத்து ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா பெறுமதியான பொருட்களைக் கொள்ளையிட்டுச் சென்ற சம்பவம் கடந்த- 12 ஆம் திகதி இடம்பெற்றிருந்தது.

ஆலயத்திற்குச் சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பிய வீட்டு உரிமையாளர்கள் வீட்டின் முன் கதவு திறக்கப்பட்டிருப்பதையும், வீட்டினுள்ளே பொருட்கள் சிதறுண்டு கிடப்பதையும் அவதானித்து அதிர்ச்சியடைந்து தேடுதல் மேற்கொண்ட போது பெறுமதியான பொருட்கள் திருட்டுப் போன விடயம் தெரிய வந்துள்ளது. சம்பவம் தொடர்பில் தெல்லிப்பழைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் தொடர் விசாரணைகளை மேற்கொண்டு வந்த பொலிஸார் குறித்த திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை(19) தெல்லிப்பழை வித்தகபுரம் பகுதியைச் சேர்ந்த இளைஞரொருவரைக் கைது செய்து நேற்று முன்தினம் மல்லாகம் மாவட்ட நீதிமன்றத்தில் நீதவான் ஏ. யூட்சன் முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.

இதன் போது சந்தேகநபரை நீதவான் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான ஆட்பிணையில் செல்ல நீதவான் அனுமதியளித்தார். அத்துடன் குறித்த வழக்கை  எதிர்வரும்-14 ஆம் வரை ஒத்திவைத்தும் உத்தரவிட்டார்.

bail

Related posts: