தேசிய மனித உரிமைகள் திட்டத்திற்கு அங்கீகாரம்!

Thursday, January 19th, 2017

அமைச்சர் ஹர்ச டி சில்வாவால் அமைச்சரவைக்குச் சமர்ப்பிக்கப்பட்ட நடப்பு ஆண்டிலிருந்து 2021ஆம் ஆண்டு வரையிலான தேசிய செயற்றிட்டத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

தேசிய மனித உரிமைகள் செயற்றிட்டத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நடப்பு ஆண்டிலிருந்து 2021ஆம் ஆண்டு வரையில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள விடயங்களை இது உள்ளடக்கியுள்ளது தேசிய மனித உரிமைகள் செயற்பாட்டுத் திட்டத்தை தயாரிப்பதற்கும் மற்றும் இதன்போது கவனத்திற் கொள்ள வேண்டிய அனைத்து அம்சங்களையும் உள்ளடக்குவதற்காகவும் அமைச்சர்கள் சிலரின் இணைத் தலைமைத்துவத்தின் கீழ் அமைச்சரவைக் குழுவொன்றை நியமிக்க அமைச்சரவை கடந்த வருடம் அங்கீகாரம் வழங்கியிருந்தது இதனடிப்படையில் குறித்த குழுவின் முழுமையான கருத்துக்களை பெற்று தயாரிக்கப்;பட்ட 5 வருட தேசிய மனித உரிமைகள் செயற்பாட்டுத்திட்டம் அமைச்சர் ஹர்ச டி சில்வாவால் அமைச்சரவைக்குச் சமர்ப்பிக்கப்பட்டது. இதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

1348029324HR-01-720x480

Related posts: