தெல்லிப்பழையில் அடையாளம் தெரியாத நபர்களால் இளம்பெண் கடத்தல்!

யாழ்.தெல்லிப்பழை பகுதியில் ஹயஸ் வாகனம் ஒன்றில் வந்த அடையாளம் தெரியாத நபர்களினால் சகோதரன் மீது தாக்குதல் நடத்தப்பட்டு இளம்பெண் கடத்தப்பட்டுள்ளதாக தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நேற்று காலை 7 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.
தெல்லிப்பழை வைத்தியசாலையில் பணிபுரியும் இளம் பெண் தனது சகோதரனது மோட்டார் சைக்கிளில் மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் சகோதரன் மீது தாக்குதல் நடத்திவிட்டு இளம்பெண்ணை கடத்திச் சென்றதாக முறைப்பாட்டில் கூறப்பட்டுள்ளது. தொடர்பில் தெல்லிப்பழை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதனிடையே
கொக்குவில் கேணியடிப் பகுதியில் நடந்த வாள்வெட்டுச் சம்பவத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில், யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று இரவு 8 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தில் குறித்த பகுதியினைச் சேர்ந்த உதயகுமார் ரதீபன் என்னும் இளைஞரே காயமடைந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கொண்ட குழுவினால் இளைஞர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
கை, கால் பகுதிகளில் காயமடைந்த குறித்த இளைஞர் அங்கிருந்து மீட்கப்பட்டு சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாண பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|