தென்மராட்சியில் வறிய குடும்பங்களுக்கு சிமெந்துப் பொதிகள் வழங்கல்!

Tuesday, October 4th, 2016

தென்மாராட்சி பிரதேசத்தில் வாழும் 90 வறிய குடும்பங்களுக்கு மானிய அடிப்படையில் தலா 10 சிமெந்துப் பொதிகள் வழங்கப்பட்டுள்ளன.

குறித்த பிரதேசத்தில் ஏற்கனவே வழங்கப்பட்ட வீடமைப்புத் திட்டங்கள் உட்பட வீட்டின் கட்டட வேலைகளை மேற்கொண்டு வீட்டின் சுவர்கள் பூசப்படாத நிலையில் வீடுகளில் வசிக்கும் வறிய குடும்பங்களுக்கு சுவர்களுக்கு பூச்சு வேலையைப் பூர்த்தி செய்வதற்காக அவை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரதேச வீடமைப்பு அலுவலரின் பரிந்துரையின் பிரகாரம் பிரதேசத்தின் 60 கிராம அலுவலர் பிரிவுகளிலிருந்தும் தெரிவு செய்யப்பட்ட 90 பயனாளிகளுக்கு வீடமைப்பு அதிகார சபையால் சிமெந்துப் பொதிகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

simanthuj

Related posts: