தென்கிழக்கு ஆசிய சுகாதார அமைச்சர்கள் கொழுப்பில்!

Saturday, September 3rd, 2016

உலக சுகாதார ஸ்தாபனத்தில் அங்கம் வகிக்கும் 11 தென்கிழக்கு ஆசிய பிராந்திய உறுப்பு நாடுகளின் சுகாதார அமைச்சர்கள் எதிர்வரும் 5ஆம் திகதி கொழும்பில் கூடவுள்ளனர்.

செப்டம்பர் ஐந்தாம் திகதி முதல் ஒன்பதாம் திகதி வரை இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  பிராந்தியத்தில் தொற்றா நோய் காரணமாக மரணமாவோரின் எண்ணிக்கையின் அதிகரிப்பு குறித்து இந்த மாநாட்டில் முக்கியமாக ஆராயப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

புற்றுநோய், நீரிழிவு, நாள்பட்ட சுவாசகோளாறு நோய்கள் போன்ற தொற்றா நோய் காரணமாக வருடாந்தரம் 85 லட்சம் பேர் மரணிப்பதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.  இந்த எண்ணிக்கையினை மட்டுப்படுத்துவது குறித்து இந்த மாநாட்டில் விரிவாக ஆராயப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பிராந்திய உறுப்பு நாடுகளில் இலங்கை உட்பட பங்களாதேஷ், பூட்டான், கொரிய ஜனநாயக மக்கள் குடியரசு, இந்தியா, இந்தோனேஷியா, மாலைதீவு, மியன்மார், நேபாளம், தாய்லாந்து மற்றும் ரீமோர்-லெஸ்டி ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கின்றன.

flag

Related posts: