தீவிரவாத பௌத்த பிக்கு தொடர்பில் எவரும் பேசுவதில்லை – சந்திரிகா

Saturday, July 1st, 2017

தீவிரவாத பௌத்த பிக்குமார் தொடர்பில் ஏன் எவரும் கருத்துக்கூறுவதில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க கேள்வி எழுப்பியுள்ளார்.

ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியொன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.குறித்த ஒரு பௌத்த மதகுரு வன்முறையான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகிறார். எனினும் எவரும் அதைப்பற்றி பேசுவதில்லை.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் அணி, நல்லிணக்கத்துக்கு ஆதரவளிக்கவில்லை. மஹிந்த ராஜபக்சவே இந்த மதகுருவின் செயற்பாடுகளை ஆரம்பித்து வைத்தார். இந்தநிலையில் பௌத்த உயர்பீட பிக்குகளும் குறித்த மதகுரு தொடர்பில் கருத்துக்களைவெளியிடாமல் இருப்பது கவலைக்குரியது என்றும் சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்

Related posts: